தாலி கட்டும் நேரத்தில் காதலனை கட்டிப்பிடித்த மணப்பெண் ஆந்திராவில் பரபரப்பு

தாலி கட்டும் நேரத்தில் காதலனை கட்டிப்பிடித்த மணப்பெண் ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் மைலாரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பக்கத்து கிராமத்து இளைஞருக்கும் இடையே காதல் இருந்து வந்தது. பெற்றோரின் எதிர்ப்பால் அவருக்கு வலுக்கட்டாயமாக வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண மண்டபத்தில் மங்கல நாண் கட்டும் கடைசி நொடியில் யாரும் எதிர்பாராத விதமாக அந்த இளம்பெண்ணின் காதலன் அங்கு நேரில் தோன்றினார்.

காதலனைப் பார்த்ததும் மணமேடையை விட்டு இறங்கிய மணப்பெண், அனைவர் முன்னிலையிலும் அவரை ஓடிச் சென்று இறுக்கக் கட்டியணைத்துக் கொண்டார். மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் தாக்கத் தொடங்கினர். தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை மீட்க, அந்தத் திருமணம் பாதியிலேயே நின்றது. இந்த சினிமா பாணி சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *