மருதமலை முருகன் கோவிலில் இன்று முதல் செல்போன் பயன்படுத்த அதிரடி தடை விதிப்பு

மருதமலை முருகன் கோவிலில் இன்று முதல் செல்போன் பயன்படுத்த அதிரடி தடை விதிப்பு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் அமைதியான தரிசனத்திற்காக இன்று மார்ச் 10, 2026 முதல் செல்போன் பயன்படுத்த கோவில் நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது. முருகனின் ஏழாவது படை வீடாக கருதப்படும் இத்தலத்தில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாட்டின்படி ராஜகோபுரம், ஆதிமூலவர் மற்றும் பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்ளிட்ட கோவில் வளாகம் முழுவதும் செல்போனில் பேசவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ அனுமதியில்லை. பக்தர்கள் அனைவரும் ராஜகோபுர நுழைவாயிலுக்குள் நுழையும் முன்பே தங்களது செல்போன்களை அணைத்து வைத்து ஒத்துழைப்பு நல்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *