தாய்வான் மீதான ராணுவ அழுத்தத்தை சீனா உடனே நிறுத்த அமெரிக்கா கடும் எச்சரிக்கை

தாய்வான் மீதான ராணுவ அழுத்தத்தை சீனா உடனே நிறுத்த அமெரிக்கா கடும் எச்சரிக்கை

தாய்வான் பகுதியை சுற்றி சீனா மேற்கொண்டு வரும் அச்சுறுத்தும் ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் தற்போதைய நிலையை பலவந்தமாக மாற்ற முயற்சிப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் எச்சரித்துள்ளார். சீனாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் மற்றும் கடல்வழி முற்றுகை முயற்சிகள் பிராந்திய அமைதிக்கு தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாக அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் இந்த ராணுவப் பயிற்சிக்கு பதிலடியாக தாய்வான் அதிபர் லாய் சிங்-தே தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கப் போவதாக உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவின் 11 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தால் ஆத்திரமடைந்துள்ள சீனா, தாய்வான் நீரிணையில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த மோதல் போக்கு ஆசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *