ஈரான் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தலையிடும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், ஈரானிய அரசாங்கத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்புப் படையினருடனான மோதலில் ஏழு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அமைதியாகப் போராடும் மக்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அவர்களுக்கு உதவ அமெரிக்கா முற்றிலும் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் 42 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்கத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மத்திய வங்கித் தலைவர் ராஜினாமா செய்த போதிலும், தெஹ்ரான் மற்றும் லொரெஸ்தான் போன்ற பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மக்கள் அரசு வாகனங்களுக்குத் தீ வைத்து ஆட்சிக்கு எதிராக முழக்கமிடுவதால் அங்கு பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.