தலைக்கு பின்னால் அடிக்கடி வலி ஏற்படுகிறதா இது உயிருக்கே ஆபத்தான இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம்
February 13, 2026

தலைக்கு பின்னால் ஏற்படும் தொடர்ச்சியான வலி சாதாரணமானது அல்ல இது உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இரத்த அழுத்தம் 180/120 mmHg அளவைத் தாண்டும்போது தலைக்கு பின்னால் கடுமையான வலி உண்டாகிறது. இத்தகைய சூழலில் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது மிகவும் அவசியமாகும்.
உயர் இரத்த அழுத்தத்தினால் தலைவலியுடன் சேர்த்து பார்வைக் குறைபாடு, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது மூளையில் உள்ள இரத்த நாளங்களில் அழுத்தம் கூடுவதால் தலைக்கு பின்னால் பாரமாக உணரப்படுகிறது. இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது பக்கவாதம் போன்ற அபாயங்களைத் தவிர்க்க உதவும்.