டெல்லி குண்டுவெடிப்பில் ஜெய்ஷ் இ முகமது தொடர்பு ஐநா உறுதி செய்தது

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு நேரடித் தொடர்பு இருப்பதை ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. 15 பேர் உயிரிழந்த இந்தத் தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ஐநா அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் எல்லைத் தாண்டிய பயங்கரவாதக் கவலைகளை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளதை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக லக்னோவில் கைது செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கும் பயங்கரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய பயங்கரவாதப் பிரிவு உலகளவில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலப்பாட்டிற்கு இந்த அறிக்கை ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.