தமிழக முதல்வருடன் இன்ஸ்டா ரீல்ஸ் செய்து அசத்திய சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவா

தமிழக முதல்வருடன் இன்ஸ்டா ரீல்ஸ் செய்து அசத்திய சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவா

சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் சிறுவர்களான தேவா மற்றும் ஜீவாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். அரசுப் பள்ளி மாணவர்களான இவர்களிடம் காலை உணவு மற்றும் கல்வி வசதிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர், அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அமைச்சா் அன்பில் மகேஸ் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.

சிறுவர்களுடன் இணைந்து வீடியோ வெளியிட்ட முதல்வர், அவர்களின் படைப்பாற்றலை வெகுவாகப் பாராட்டினார். குழந்தைகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கிய அவர், அவர்களின் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரி கனவுகள் நனவாக மனதார வாழ்த்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *