ஈரானின் முக்கிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் 200-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலிய விமானப்படை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. டெஹ்ரான், ஷிராஸ் மற்றும் அஹ்வாஸ் ஆகிய நகரங்களில் உள்ள ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து இந்த வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையின் கீழ் ஈரானில் இதுவரை 3,000 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுத கிடங்குகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த மோதலால் ஈரான் பெரும் உள்கட்டமைப்பு சேதங்களை சந்தித்துள்ள நிலையில், போர் சூழல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.