தந்தை 97 லட்சம் கோடிக்கு அதிபதி என்பது மகளுக்கே தெரியாது வாரன் பபெட்டின் வியக்கவைக்கும் ரகசியம்

உலகின் மிகச்சிறந்த முதலீட்டாளரான வாரன் பபெட் தனது 60 ஆண்டுகால சாதனைப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஓய்வு பெறுகிறார். சுமார் 97 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பெர்க்ஷயர் ஹாத்வே பேரரசை உருவாக்கிய இவரது எளிமை அனைவரையும் வியக்க வைக்கிறது. ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பபெட்டின் மகள் சூசனுக்கு தனது தந்தை இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்பது அவர் 22 வயதாகும் வரை தெரியாது. ஒரு பத்திரிகை செய்தியை வாசித்த பிறகே அவர் உண்மையை அறிந்து கொண்டார்.
தனது 11 வயதிலேயே முதலீட்டைத் தொடங்கிய பபெட், பொறுமை மற்றும் கடின உழைப்பால் வெற்றிக் கொடி நாட்டினார். இன்றும் 1958-ல் வாங்கிய பழைய வீட்டிலேயே வசிக்கும் இவர், மிக எளிமையான உணவுகளையும் சிக்கனமான வாழ்க்கையையுமே விரும்புகிறார். 95 வயதிலும் தனது நேரத்தின் பெரும்பகுதியை வாசிப்பிற்காகவே செலவிடும் இவருடைய வாழ்க்கை வரலாறு, வளரும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.