டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய மூதாட்டியின் ஒரு கோடி ரூபாயை மீட்ட வங்கி மேலாளர்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய மூதாட்டியின் ஒரு கோடி ரூபாயை மீட்ட வங்கி மேலாளர்

லக்னோவில் உள்ள பிஎன்பி கிளையில் 75 வயது மூதாட்டி ஒருவர் தனது 1.13 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 எஃப்டிகளை உடனடியாக ரத்து செய்யுமாறு பதற்றத்துடன் கோரினார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த வங்கி மேலாளர், அவரிடம் விசாரணை நடத்தினார். தொடக்கத்தில் பிள்ளைகளுக்காக பணம் தேவை என்று பொய் சொன்ன மூதாட்டி, வங்கி ஊழியர்களின் தொடர் முயற்சியால் தான் மிரட்டப்படுவதை ஒப்புக்கொண்டார்.

கடந்த நான்கு நாட்களாக சிபிஐ அதிகாரிகள் என கூறிக்கொண்ட கும்பலால் அந்த மூதாட்டி டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டு மிரட்டப்பட்டது தெரியவந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்க வைக்கப்போவதாக கூறி அவரது சேமிப்பை பறிக்க மோசடி கும்பல் முயன்றது. வங்கி ஊழியர்களின் மூன்று மணி நேர சாதுரியமான பேச்சுவார்த்தை மற்றும் துரித நடவடிக்கையால் அந்த பெரிய தொகை காப்பாற்றப்பட்டது. வங்கி அதிகாரிகளின் இந்த விழிப்புணர்வை காவல்துறை பாராட்டியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *