ஜம்மி லாய்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஹாங்காங் நீதிமன்றம்

ஜம்மி லாய்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஹாங்காங் நீதிமன்றம்

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு தலைவரும் ஊடக அதிபருமான ஜிமி லாய்க்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் மீதான ஐந்தாண்டு கால சட்டப் போராட்டம் இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. பெய்ஜிங்கின் அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஜிமி லாய், கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டம் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே கொண்டு வரப்பட்டதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக ஜிமி லாய்க்கு சொந்தமான ‘ஆப்பிள் டெய்லி’ என்ற நாளிதழும் சீன எதிர்ப்பு செய்திகளை வெளியிட்டதற்காக மூடப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் ஹாங்காங்கின் ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *