தேர்தல் நேரத்தில் இருளில் மூழ்குகிறதா வங்கதேசம் அதானி குழுமம் விடுத்த அதிரடி எச்சரிக்கை

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதானி பவர் நிறுவனம் மின் வாரியத்திற்கு (PDB) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 11.27 கோடி அமெரிக்க டாலர் நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்தக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான மின் விநியோக நிலுவை நிலுவையில் உள்ளதால், உரிய நேரத்தில் பணம் செலுத்தத் தவறினால் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என அந்த கடிதத்தில் அதானி குழுமத்தின் துணைத் தலைவர் அவினாஷ் அனுராக் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 12-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோன்ற நெருக்கடி ஏற்பட்டபோது வங்கதேச அரசு ஒரு பகுதியைச் செலுத்தியது. தற்போது மீண்டும் நிலுவைத் தொகை அதிகரித்துள்ளதால், தேர்தலுக்கு முன் மின் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இது அந்நாட்டின் தற்போதைய பதற்றமான அரசியல் சூழலில் கூடுதல் சவாலாக மாறியுள்ளது.