ஜப்பான் தேர்தலில் சானே தகைச்சியின் வரலாற்று வெற்றி; பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் சானே தகைச்சி தலைமையிலான ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தகைச்சியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா – ஜப்பான் இடையிலான நட்பு மற்றும் உலகளாவிய கூட்டாண்மை புதிய உச்சங்களை எட்டும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
465 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், ‘சனா-மேனியா’ அலையினால் தகைச்சியின் கூட்டணி 352 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளரான தகைச்சி, ஜப்பானை வலுவான நாடாக மாற்றப்போவதாக உறுதியளித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.