சூரிய கிரகண பஞ்சகிரகி யோகம் இந்த 4 ராசிகளுக்கு பணமழையை பொழியும்
February 9, 2026

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17-ஆம் தேதி கும்ப ராசியில் நிகழ்கிறது. இந்த வேளையில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் மற்றும் ராகு இணைந்து சக்திவாய்ந்த ‘பஞ்சகிரகி யோகத்தை’ உருவாக்குகின்றனர். இந்த அபூர்வ நிகழ்வு இந்தியாவில் காணப்படாவிட்டாலும், இதன் தாக்கம் உலகளாவிய ரீதியில் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ஆகிய நான்கு ராசிகளுக்கு இந்த யோகம் பெரும் அதிர்ஷ்டத்தைத் தரும். இவர்களுக்குத் தொழிலில் முன்னேற்றம், புதிய வருமான வாய்ப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். சொத்து சேர்க்கை மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி என இந்த கிரகண காலம் இவர்களுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது.