சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் இந்தியா கூட்டணி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரையை சபாநாயகர் ஓம் பிர்லா தடுத்ததாகக் கூறி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ராகுல் காந்தியின் பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எழுந்த அமளிக்கு மத்தியில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இது தொடர்பாக மக்களவை பொதுச் செயலாளரிடம் விரைவில் நோட்டீஸ் அளிக்கப்பட உள்ளது.
இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த முடிவால் நாடாளுமன்றத்தில் அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சிகளின் பலத்தை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படுவது கடினம் என்றாலும், சபாநாயகரின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது எம்.பி.க்களின் கையெழுத்து பெறும் பணி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இந்தத் தீர்மானம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.