சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு கொடூரக் கொலை அம்பலம்
December 17, 2025

ஹாப்பூர் வயல்வெளியில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண் எலும்புக்கூட்டின் மர்மத்தை போலீசார் துலக்கினர். ஜார்க்கண்டைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்துக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். தனது குற்றத்தை மறைக்கவே இந்த கொடூரத்தை அரங்கேற்றியதாக அங்கித் ஒப்புக்கொண்டுள்ளார்.
நொய்டாவில் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் உடல், ஆதாரங்களை அழிப்பதற்காக சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஹாப்பூரில் வீசப்பட்டது. டெல்லி மற்றும் ஹாப்பூர் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி விசாரணையில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.