75 வயதிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வளவு ஃபிட்டாக இருக்க இதுதான் காரணம்
December 17, 2025

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70 வயதைக் கடந்தும் இன்றும் இளைஞர்களுக்கு நிகரான சுறுசுறுப்புடன் விளங்குகிறார். இவரது ஆரோக்கியத்தின் ரகசியம் அவர் தவிர்க்கும் ஐந்து ‘வெள்ளை உணவுகள்’ தான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சர்க்கரை, உப்பு, மைதா, வெள்ளை அரிசி மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பதே ரஜினியின் கட்டுக்கோப்பான உடல்வாக்கிற்கு முக்கிய காரணமாகும்.
உணவுக் கட்டுப்பாடு மட்டுமின்றி, முறையான உடற்பயிற்சி மற்றும் தியானத்தையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். 40 வயதிற்குப் பிறகு செரிமானத் திறன் குறைவதால், இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம் என மருத்துவர் பிரீதி மிருணாளினி விளக்கியுள்ளார். இந்த ஒழுக்கமான வாழ்வியலே ரஜினிகாந்தை இன்றும் திரையில் மின்ன வைக்கிறது.