சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமனம்
February 13, 2026

வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருமுறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 13 அன்று சமூக வலைதளங்கள் மூலம் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரவீந்திர ஜடேஜா உட்பட ஆறு முக்கிய வீரர்களை பின்னுக்குத் தள்ளி அசாம் வீரர் ரியான் பராக் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.