தடை செய்யப்பட்ட ரன்வீர் சிங்கின் துருந்தர் படம் பாகிஸ்தான் சந்தையில் வெறும் 16 ரூபாய்க்கு விற்பனை

தடை செய்யப்பட்ட ரன்வீர் சிங்கின் துருந்தர் படம் பாகிஸ்தான் சந்தையில் வெறும் 16 ரூபாய்க்கு விற்பனை

பாகிஸ்தானில் ரன்வீர் சிங் நடித்த பாலிவுட் திரைப்படமான ‘துருந்தர்’ திரையிட அரசு தடை விதித்துள்ள நிலையிலும் அந்நாட்டு ரசிகர்களிடையே இப்படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. திரையரங்குகளில் படம் வெளியாகாததால் தடையை மீறி மக்கள் சட்டவிரோதமான முறையில் இப்படத்தை பார்த்து வருகின்றனர்.

கராச்சியின் பல்வேறு சந்தைகளில் இப்படத்தின் திருட்டு குறுந்தகடுகள் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்றன. வெறும் 50 பாகிஸ்தான் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 ரூபாய்க்கு இந்த தடை செய்யப்பட்ட படத்தின் பிரதிகள் கிடைப்பதால் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *