கொல்கத்தாவில் ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய் ஆனாலும் அலைமோதும் மக்கள் கூட்டம்
December 29, 2025

கொல்கத்தாவில் பார்த்த பிரதிம் கங்குலி என்பவர் நடத்தி வரும் ‘நிர்ஜாஷ் டீ ஸ்டால்’ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தனது கார்ப்பரேட் வேலையைத் துறந்து இந்த டீ கடையை அவர் தொடங்கினார். இங்கு ஒரு கப் டீயின் விலை ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதன் தனித்துவமான சுவையை அனுபவிக்க நாள்தோறும் ஏராளமான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
இந்த டீ இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பதற்குக் காரணம் அதில் பயன்படுத்தப்படும் ‘போ-லே’ (Bo-Lay) வகை தேயிலை ஆகும். சர்வதேச சந்தையில் ஒரு கிலோ போ-லே தேயிலையின் விலை சுமார் 3 லட்சம் ரூபாயாகும். அதனால்தான் இங்கு ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே சமயம், சாதாரண மக்களுக்காக 10 ரூபாய்க்கும் இங்கு டீ கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.