கௌதம் கம்பீருக்கு கல்தா கொடுத்துவிட்டு டெஸ்ட் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மணுக்கு பிசிசிஐ குறிவைப்பது ஏன்

கௌதம் கம்பீருக்கு கல்தா கொடுத்துவிட்டு டெஸ்ட் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மணுக்கு பிசிசிஐ குறிவைப்பது ஏன்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அணி பின்னடைவை சந்தித்து வருகிறது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தோல்விகள் கம்பீரின் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பயிற்சியின் கீழ் விளையாடிய 19 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் டெஸ்ட் அணிக்கு மட்டும் புதிய பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இதற்காக பிசிசிஐ தரப்பில் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவே நீடிக்க விரும்புவதாகக் கூறி, அவர் இந்த வாய்ப்பை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சரிவை மீட்டெடுக்க பிசிசிஐ அடுத்து எந்த ஜாம்பவானை அணுகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *