கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க உத்தரகண்ட் முடிவு
March 12, 2026

உத்தரகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் உள்ளிட்ட 45 கோயில்களில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்கப்பட உள்ளது. புரி ஜெகந்நாதர் கோயில் நடைமுறையைப் பின்பற்றி, இந்த புனிதத் தலங்களின் ஆன்மீக மாண்பைக் காக்க கோயில் மேலாண்மை வாரியம் இந்த அதிரடி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி அக்ஷய திருதியை அன்று சார்தாம் யாத்திரை தொடங்குகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26-ன் கீழ் மத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கோயில் வளாகம் மற்றும் கருவறைக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.