குருவாயூர் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி நீண்ட வரிசை இல்லை: வந்துவிட்டது புதிய டெக்னாலஜி!

கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் மணிநேக்கணக்கில் காத்திருப்பதை தவிர்க்க, கோவில் நிர்வாகம் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ‘ஃபேஸ் ஆப்’ (Face App) தொழில்நுட்பம் மூலம் இனி பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யலாம். இந்த புதிய முறையில் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, குறிப்பிட்ட தரிசன நேரம் குறித்த டோக்கன் வழங்கப்படும்.
தற்போதுள்ள முறைப்படி விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் பேர் வரை கூடுவதால் ஏற்படும் நெரிசலை இது கட்டுப்படுத்தும். காத்திருப்பு பகுதியில் பக்தர்கள் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, திரையில் டோக்கன் எண்கள் தோன்றும் போது மட்டும் தரிசனத்திற்குச் சென்றால் போதுமானது. இந்த நவீன வசதியால் பக்தர்கள் இனி வரிசையில் நிற்காமல் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாக அதிகாரி வினய்குமார் தெரிவித்துள்ளார்.