குட்கா மற்றும் பான் மசாலா விலை அதிரடியாக உயர்கிறது புதிய வரி விதிப்பால் அதிர்ச்சியில் நுகர்வோர்
February 1, 2026

புகையிலை தயாரிப்புகளுக்கான வரி விதிப்பு முறையில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இனி குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்களுக்கு உற்பத்தி செலவுக்குப் பதிலாக விற்பனை விலையின் அடிப்படையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் உற்பத்தித் திறனைப் பொறுத்து கூடுதல் சுகாதார வரி விதிக்கப்படுவதால் இந்தத் தயாரிப்புகளின் மொத்த வரிச் சுமை பெருமளவு அதிகரிக்கப் போகிறது.
புதிய விதிகளின்படி குட்கா மீது 91 சதவீதமும் ஜர்தா மற்றும் புகையிலை மீது 82 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பான் மசாலா மீதான மொத்த வரி 88 சதவீதம் வரை உயரக்கூடும் எனத் தெரிகிறது. புகையிலை பயன்பாட்டைக் குறைக்கவும் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.