காசியாபாத் விபரீதம் மூன்று மகள்களை இழந்த தந்தையை வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன உரிமையாளர்
February 13, 2026

காசியாபாத் பாரத் சிட்டி சொசைட்டியில் மூன்று சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகள்களை இழந்து வாடும் தந்தை சேத்தனுக்கு, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். சேத்தனுக்கு மூன்று திருமணங்கள் ஆனது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறுமிகள் தற்கொலைக்கு ஆன்லைன் கொரியன் கேம்கள் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களின் செல்போன் தரவுகள் மற்றும் தந்தையின் வங்கி கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. குடும்பத்தில் நிலவிய நிதி நெருக்கடி அல்லது ஆன்லைன் சவால்கள் இந்த துயரத்திற்கு காரணமா என்பதைக் கண்டறிய டிஜிட்டல் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.