இரண்டு தொகுதிகளில் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்றும் பிஎன்பி கொண்டாட்டங்களை தவிர்ப்பது ஏன்

இரண்டு தொகுதிகளில் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்றும் பிஎன்பி கொண்டாட்டங்களை தவிர்ப்பது ஏன்

வங்கதேச பொதுத்தேர்தலில் பிஎன்பி கட்சி அமோக வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் டாக்கா-17 மற்றும் போக்ரா-6 ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். நாடு முழுவதும் அக்கட்சி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழலில் வெற்றி ஊர்வலங்கள் அல்லது பொதுக்கூட்டங்கள் நடத்தப்படாது என்று பிஎன்பி தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

மறுபுறம் தேர்தல் முடிவுகளின் வெளிப்படைத்தன்மை குறித்து ஜமாத்-இ-இஸ்லாமி கேள்வி எழுப்பியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முறை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அந்த கட்சி, தங்கள் கூட்டணி வேட்பாளர்கள் மர்மமான முறையில் தோல்வியடைந்துள்ளதாக கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிடாதது நடுநிலைமை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *