கண்ணைக் கட்டி இரும்பு கம்பியால் அடித்து உதைப்பு என மானாமதுரை ஆகாஷின் மரண வாக்குமூலம் அம்பலம்

கண்ணைக் கட்டி இரும்பு கம்பியால் அடித்து உதைப்பு என மானாமதுரை ஆகாஷின் மரண வாக்குமூலம் அம்பலம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் இருந்த ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ், போலீஸ் காவலில் இருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், போலீசாரின் கொடூரமான தாக்குதலே மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது வெளியாகியுள்ள ஆகாஷின் ரிமாண்ட் ரிப்போர்ட் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. கண்ணைக் கட்டி, ஈர சாக்கை காலில் போட்டு, இரும்பு கம்பியால் தாக்கியதால் எலும்பு முறிந்ததாக ஆகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி உடற்கூராய்வு நடைபெற்று வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *