மொபைல் டேட்டாவுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு அதிரடி ஆய்வு
March 11, 2026

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு புதிய வரி விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன்படி, ஒரு ஜிபி டேட்டாவுக்கு ஒரு ரூபாய் வரை கூடுதல் வரி வசூலிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இது தொடர்பான விரிவான அறிக்கை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தற்போது ரீசார்ஜ் கட்டணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் நிலையில், புதிய திட்டம் அமலானால் டேட்டா பயன்பாட்டின் அடிப்படையில் கூடுதல் செலவு ஏற்படும். இந்தத் திட்டம் இன்னும் ஆரம்பகட்ட ஆய்வில் மட்டுமே உள்ளதாகவும், இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது மொபைல் பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.