ஐதராபாத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் வைரல் வீடியோ

ஐதராபாத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் வைரல் வீடியோ

ஐதராபாத்தில் நடைபெற்ற ‘தி ராஜா சாப்’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை நிதி அகர்வால் கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் அவதிக்குள்ளானார். ரசிகர்கள் முண்டியடித்ததில் அவர் நிலைகுலைந்து போனதுடன், அவரது உடை விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார். பாதுகாப்பு பணியாளர்கள் இருந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் அவ்விடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பொது நிகழ்ச்சிகளில் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. ரசிகர்களின் அநாகரீகமான செயல்பாடும், விழா குழுவினரின் போதிய திட்டமிடல் இன்மையுமே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *