எச்சரிக்கை! வாட்ஸ்அப்பில் உங்களது ‘ரகசிய புகைப்படம்’: ஒரு கிளிக் செய்தால் கணக்கு ஹேக் ஆகும்
December 20, 2025

“உங்களது புகைப்படம் எனக்கு கிடைத்துள்ளது” என்று வரும் மெசேஜ்கள் மூலம் ஹேக்கர்கள் புதிய வலையை விரித்துள்ளனர். முகநூல் போன்ற போலி லிங்கில் மொபைல் எண் மற்றும் வாட்ஸ்அப் ஜோடி குறியீட்டை (Pairing Code) உள்ளீடு செய்தால், உங்கள் கணக்கின் முழு கட்டுப்பாடும் ஹேக்கர்கள் கைக்கு சென்றுவிடும்.
தற்போது செக் குடியரசில் கண்டறியப்பட்டுள்ள இந்த மோசடி உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருக்க சந்தேகத்திற்குரிய லிங்குகளை தவிர்க்கவும். வாட்ஸ்அப் செட்டிங்ஸில் உள்ள ‘Linked Devices’ பகுதிக்குச் சென்று தேவையற்ற இணைப்புகளை உடனே நீக்கிவிடவும்.