உஷார்! OTP பகிராமலேயே காலி செய்யப்படும் வங்கி கணக்கு; புதிய மோசடியால் மக்கள் அதிர்ச்சி
December 20, 2025

டிஜிட்டல் பரிவர்த்தனை காலத்தில், ‘ஸ்கிரீன் மிரரிங்’ செயலிகள் மூலம் புதிய வகை சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. நீங்கள் ஓடிபி (OTP) எண்ணைப் பகிராவிட்டாலும், உங்கள் மொபைல் திரையைக் கண்காணிப்பதன் மூலம் ஹேக்கர்கள் பணத்தைத் திருட வாய்ப்புள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுகம் இல்லாத லிங்க்குகளை கிளிக் செய்யவோ அல்லது சந்தேகத்திற்குரிய செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். வங்கிப் பாதுகாப்பு கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றுவது அவசியம். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றம் நடந்தால் உடனடியாக வங்கி மற்றும் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.