ஈரான் எல்லையில் போர் பதற்றம் அதிகரிப்பால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா

ஈரான் எல்லையில் போர் பதற்றம் அதிகரிப்பால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் ஈரான் ‘ஹார்மோஸ்’ நீரிணை பாதையை மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, கடலில் இந்தியக் கப்பல்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் வணிக ரீதியிலான எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் மூடப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் போக்குவரத்தையும் கடுமையாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் அமைச்சருடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் அதன் விளைவுகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விரிவாக விவாதித்தனர். கடந்த இரு வாரங்களில் இது மூன்றாவது சந்திப்பாகும். நிலைமையை சீர்செய்ய தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *