திமுக ஆட்சியை வீழ்த்த மக்கள் தயார் திருச்சியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அதிரடி
March 12, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, தமிழக மக்கள் தற்போதைய திமுக அரசை அகற்றிவிட்டு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், அந்த மாற்றத்தை என்.டி.ஏ கூட்டணியால் மட்டுமே வழங்க முடியும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
சுமார் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையிலான இத்திட்டங்கள் தமிழக இளைஞர்களுக்குப் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது இலக்கு என்றும் மோடி பேசினார்.