இளைய அதிகாரிகளுடன் 61 வயதில் புஷ்-அப்! உற்சாகப்படுத்திய இராணுவத் தளபதி

இளைய அதிகாரிகளுடன் 61 வயதில் புஷ்-அப்! உற்சாகப்படுத்திய இராணுவத் தளபதி

டேராடூன்: இந்திய இராணுவ அகாடமியில் (IMA) 491 புதிய அதிகாரிகளின் பாஸிங் அவுட் அணிவகுப்பு (POP) டிசம்பர் 14, 2025 அன்று நிறைவடைந்தது. இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவேதி தலைமை விருந்தினராக பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாட்டின் மூத்த இராணுவ அதிகாரியான 61 வயது நிரம்பிய ஜெனரல் துவேதி, விழாவில் புதிய அதிகாரிகளை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு செயலை செய்தார்.

அவர் புதிய அதிகாரிகளுடன் சேர்ந்து 20 புஷ்-அப்களை எளிதாகச் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ‘பீப்பிங் செரிமனி’க்குப் பிறகு, இராணுவத் தளபதி மைதானத்திற்குச் சென்று, அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உரையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டார். தளபதியின் இந்த உத்வேகமளிக்கும் அணுகுமுறை அனைவரின் மனதையும் கவர்ந்ததுடன், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *