இயற்கை தங்கத்திற்கு சவால் விடும் வகையில் ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை தங்கம்

இயற்கை தங்கத்திற்கு சவால் விடும் வகையில் ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை தங்கம்

சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்திற்கு மாற்றாக, அதே வேதியியல் பண்புகள் மற்றும் அடர்த்தியுடன் ஆய்வகங்களில் செயற்கை தங்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது கவரிங் போன்ற போலி தங்கம் அல்ல, அணு அமைப்பில் அசல் தங்கத்திற்கு 100 சதவீதம் இணையானது. ஆய்வக வைரங்களைப் போலவே, எதிர்காலத்தில் நகைகளிலும் இந்த செயற்கை தங்கத்தின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது இந்த முயற்சி ஆரம்பகட்ட சோதனையில் இருப்பதால், இதன் உற்பத்தி செலவு சந்தை விலையை விட அதிகமாகவே உள்ளது. வணிக ரீதியான விற்பனைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால், தற்போதைய தங்க விலை சரிவிற்கு இது காரணமல்ல. எனினும், எதிர்காலத்தில் இது முதலீடு மற்றும் கலாச்சார ரீதியாக பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *