சிபிஐ சம்மனை புறக்கணித்து வேட்பாளர் நேர்காணலில் தீவிரம் காட்டும் விஜய்
March 10, 2026

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று டெல்லி செல்லாமல் கட்சிப் பணிகளில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணலை சென்னை பனையூர் அலுவலகத்தில் அவர் இன்று தொடங்குகிறார். விசாரணைக்கு நேரில் ஆஜராக 15 நாட்கள் கூடுதல் கால அவகாசத்தையும் அவர் கோரியுள்ளார்.
இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த நேர்காணலில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். குடும்ப சிக்கல்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியிலும், மின்னஞ்சல் மூலம் அழைக்கப்பட்ட நிர்வாகிகளுடன் நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.