இந்தோனேசிய பெண் காவலர் பணியிடத்தில் அரங்கேறும் அதிர்ச்சியூட்டும் கன்னித்தன்மை சோதனை

இந்தோனேசியாவில் பெண்கள் காவலர் பணியில் சேருவதற்குப் பின்பற்றப்படும் வினோதமான மற்றும் சர்ச்சைக்குரிய விதிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அங்கு 17.5 முதல் 22 வயது வரையிலான திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் அனைத்தையும் விட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், விண்ணப்பிக்கும் பெண்கள் தங்களின் கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டியது கட்டாயமாகும். ‘டூ பிங்கர் டெஸ்ட்’ எனப்படும் இந்தச் சோதனையானது பெண் விண்ணப்பதாரர்களின் உடல் ரீதியான தூய்மையைச் சோதிக்கப் பயன்படுத்தப்படுகிறது, இது தற்போது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த நடைமுறையை ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை அமைப்புகள் கடுமையாகச் சாடியுள்ளன. இது மனித உரிமைகளை மீறும் செயல் என்றும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவை குற்றம் சாட்டுகின்றன. மேலும், இந்தப் பணிக்கு அழகின் அடிப்படையில் மட்டுமே பெண்கள் தேர்வு செய்யப்படுவதாகவும், தேர்வு குழுவில் ஆண்கள் மட்டுமே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இத்தகைய சோதனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவின் இந்தப் பழமைவாத விதிமுறை உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.