இந்தியாவின் செவன் சிஸ்டர்ஸ் மாநிலங்களை துண்டாடுவோம் என வங்கதேச தலைவர் சர்ச்சை பேச்சு

இந்தியாவின் செவன் சிஸ்டர்ஸ் மாநிலங்களை துண்டாடுவோம் என வங்கதேச தலைவர் சர்ச்சை பேச்சு

வங்கதேச தேசிய குடிமக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, இந்தியாவிற்கு எதிராக கடும் நச்சுக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான ‘செவன் சிஸ்டர்ஸ்’ பகுதிகளை இந்தியாவிலிருந்து பிரிப்போம் என்றும், இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு வங்கதேசம் புகலிடம் அளிக்கும் என்றும் அவர் பகிரங்கமாக மேடையில் முழங்கியுள்ளார்.

டாக்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக வங்கதேச மண்ணில் இருந்து இத்தகைய நேரடி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது, இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு மற்றும் தூதரக உறவுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *