அறிவாலயத்தின் முன் விவசாயிகள் கைது எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

அறிவாலயத்தின் முன் விவசாயிகள் கைது எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சரைச் சந்திக்க வந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அண்ணா அறிவாலயத்தின் முன் கைது செய்யப்பட்டனர். இந்தச் செயலை ஜனநாயக விரோதம் எனக் குறிப்பிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் மனுக்களைப் பெறக்கூட முதலமைச்சருக்கு மனமில்லை எனச் சாடியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு மக்களிடம் பெட்டி ஏந்தி மனு வாங்கிய ஸ்டாலின், தற்போது விவசாயிகளைச் சந்திக்க மறுப்பது அவரது உண்மையான முகத்தைக் காட்டுகிறது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து, அவர்களின் கோரிக்கைகளை அரசு முறையாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *