அரசியலமைப்பு சட்டம் ‘பாரத மாதா’ என்று தொடங்கவில்லை ஓவைசி அதிரடி

அரசியலமைப்பு சட்டம் ‘பாரத மாதா’ என்று தொடங்கவில்லை ஓவைசி அதிரடி

தெலங்கானாவின் கரீம்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ‘மக்களாகிய நாம்’ என்றே தொடங்குகிறது, ‘பாரத மாதா’ என்று அல்ல எனத் தெரிவித்தார். மத வழிபாட்டை தேசபக்தியுடன் இணைப்பது தவறு எனக் குறிப்பிட்ட அவர், சுதந்திரத்திற்காக உயிர்நீத்த பகதூர் ஷா ஜஃபர் மற்றும் ‘வெள்ளையனே வெளியேறு’ முழக்கத்தை உருவாக்கிய யூசுப் மெஹர் அலி போன்றவர்களின் தியாகங்களைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

மேலும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் பாஜகவின் தேசியவாதத்தைக் கண்டித்த ஓவைசி, அமெரிக்காவின் எச்சரிக்கைக்குப் பிறகு இந்தியா பின்வாங்கியதாகக் குற்றம் சாட்டினார். கரீம்நகரின் வளர்ச்சிப் பணிகளில் சிறுபான்மையினர் பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பிஆர்எஸ் கட்சிக்கு வாக்களிப்பது மறைமுகமாக பாஜகவிற்கே சாதகமாக அமையும் என்றும் அவர் எச்சரித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *