டி20 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் இந்தியாவின் அதே நிலையில் இருக்கும் 3 ஜாம்பவான் அணிகள்
February 9, 2026

2026 டி20 உலகக்கோப்பையின் தற்போதைய புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்துகிறது. அதேபோல் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் தத்தமது பிரிவுகளில் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளன. தற்போது வரை விளையாடியுள்ள 12 அணிகளில் இந்தியா ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
குழு ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலா இரண்டு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. அதே சமயம் குழு பி பிரிவில் அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. குழு சி பிரிவில் சிறந்த ரன் ரேட் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் முதலிடத்திலும், குழு டி பிரிவில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் உச்சத்திலும் உள்ளன.