அமெரிக்க வீரர்கள் பலி: சிரியாவில் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்’ அதிரடி ஆரம்பம்

அமெரிக்க வீரர்கள் பலி: சிரியாவில் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்’ அதிரடி ஆரம்பம்

சிரியாவின் பால்மைராவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக அமெரிக்கா ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்’ என்ற பெயரில் சுமார் 70 ஐஎஸ் முகாம்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை போர் விமானங்கள் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.

அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் எங்கு மறைந்திருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பயங்கரவாதிகள் இந்தச் செயலுக்காக கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என்று பாதுகாப்புத்துறை செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *