அமெரிக்க எச் 1பி விசா சிக்கல்களால் இந்தியர்களின் கனவு மாறுமா மாற்றாக உருவெடுக்கும் ஓ 1 விசா
March 11, 2026

அமெரிக்காவின் எச் 1பி விசா நடைமுறைகளில் நிலவும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் காலதாமதம் காரணமாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது ஓ 1 மற்றும் இபி 1 போன்ற மாற்று விசாக்களை நாடத் தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களில் இந்தியர்களே பெரும்பான்மையாக இருந்தாலும் தற்போதைய தேக்கநிலை பலரை தாயகம் திரும்ப தூண்டுகிறது.
விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படும் காலம் அதிகரித்துள்ள போதிலும் ஓ 1 விசாக்களுக்கு சுமார் 90 சதவீத அங்கீகாரம் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எச் 1பி விசாவுடன் ஒப்பிடும்போது இது அதிக வாய்ப்புகளை வழங்கினாலும் தூதரக நடைமுறைகளுக்காக காத்திருக்கும் காலம் விண்ணப்பதாரர்களுக்கு பெரும் சவாலாகவே நீடிக்கிறது.