மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் முடங்கியது இந்தியாவின் 4 லட்சம் டன் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி

மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் முடங்கியது இந்தியாவின் 4 லட்சம் டன் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால் சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் அரிசி துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளதாக அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் இந்திய அரிசியின் முக்கிய சந்தையாக இருப்பதால் இந்த வணிகத் தடை பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சரக்கு பெட்டக வாடகை இருமடங்காக உயர்ந்துள்ள நிலையில் துறைமுக வாடகையை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *