அமெரிக்காவில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது இதில் ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் முதலீடு செய்கிறது
March 11, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெக்சாஸின் பிரவுன்ஸ்வில்லில் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகு அந்நாட்டில் உருவாகும் முதல் சுத்திகரிப்பு நிலையம் இதுவாகும். சர்வதேச சந்தையில் ஈரானுடனான பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மெகா திட்டத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்து 20 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1.6 லட்சம் பேரல் எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த நிலையம் அமெரிக்காவின் உள்நாட்டு ‘ஷேல் ஆயில்’ வளத்தைப் பயன்படுத்தும். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.