ஹார்முஸ் நீரிணையை ஈரான் மறித்தால் அமெரிக்கா 20 மடங்கு கடும் பதிலடி கொடுக்கும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையை ஈரான் மறித்தால் அமெரிக்கா 20 மடங்கு கடும் பதிலடி கொடுக்கும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால் 20 மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா நடத்தும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானால் மீண்டும் மீள முடியாத அளவுக்கு மிக மோசமான அழிவைச் சந்திக்க நேரிடும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எச்சரிக்கை சீனா உள்ளிட்ட நீரிணையைப் பயன்படுத்தும் நாடுகளுக்கு அமெரிக்காவின் ‘பரிசு’ என்று டிரம்ப் விவரித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக இருப்பதால், ஈரான் அதைத் தடுத்தால் உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். டிரம்பின் இந்த அதிரடி பேச்சு தற்போது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *