ஸ்மிருதி மந்தனா படைத்த புதிய சாதனை ஹர்மன்பிரீத் கவுரின் சாதனையை முறியடித்து அசத்தல்

ஸ்மிருதி மந்தனா படைத்த புதிய சாதனை ஹர்மன்பிரீத் கவுரின் சாதனையை முறியடித்து அசத்தல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், மிதாலி ராஜுக்குப் பிறகு இச்சாதனையைச் செய்யும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இப்போட்டியில் 48 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார் மந்தனா.

இந்த இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற ஹர்மன்பிரீத் கவுரின் சாதனையை அவர் முறியடித்தார். தற்போது 151 இன்னிங்ஸ்களில் 80 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் ஷஃபாலி வர்மா 69 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். ஸ்மிருதியின் இந்த அபார வளர்ச்சி இந்திய கிரிக்கெட்டிற்கு பெரும் பெருமையை சேர்த்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *