ஸ்காட்லாந்து காடுகளில் ஆச்சரியம் இலைகளுக்கு பதிலாக நாணயங்களால் நிரம்பிக் கிடக்கும் பண மரம்

ஸ்காட்லாந்து காடுகளில் ஆச்சரியம் இலைகளுக்கு பதிலாக நாணயங்களால் நிரம்பிக் கிடக்கும் பண மரம்

ஸ்காட்லாந்தின் பீக் டிஸ்ட்ரிக்ட் காடுகளில் அமைந்துள்ள ஒரு மரம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 1700 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்த மரத்தை உள்ளூர் மக்கள் புனிதமானதாகவும் தெய்வீக சக்தி கொண்டதாகவும் நம்புகிறார்கள். இந்த மரத்தின் பட்டையில் நாணயங்களைப் பதித்தால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் அதிர்ஷ்டம் பெருகும் என்பதும் பல தலைமுறைகளாகத் தொடரும் நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு நாணயங்களைச் செலுத்தி வருகின்றனர்.

தொடர்ச்சியாகப் பதிக்கப்படும் நாணயங்களால் இன்று அந்த மரம் முழுவதும் உலோக மயமாகக் காட்சியளிக்கிறது. மரத்தில் இலைகளோ அல்லது பழங்களோ வளர முடியாத அளவுக்கு நாணயங்கள் அதன் கிளைகளை ஆக்கிரமித்துள்ளன. தூரத்திலிருந்து பார்க்கும்போது மரத்தில் பணம் காய்த்துக் குலுங்குவது போன்ற தோற்றத்தைத் தருகிறது. இந்த விசித்திரமான மற்றும் அதிசயமான பண மரத்தைக் காண உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் ஸ்காட்லாந்திற்குப் படையெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *