நாங்கள் உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கிறோம் பாகிஸ்தான் பிரதமரின் அதிரடி ஒப்புதல்

நாங்கள் உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கிறோம் பாகிஸ்தான் பிரதமரின் அதிரடி ஒப்புதல்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார். நாட்டுக்காக நிதி திரட்ட அவரும் ராணுவத் தளபதி ஆசிம் முனீரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ‘பிச்சை’ எடுப்பதாக அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இந்த நிலையை அவர் ‘வெட்கக்கேடானது’ என்றும், நாட்டின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்றும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகளால் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ள போதிலும், கடன் வாங்குவது நாட்டின் கௌரவத்தைப் பாதிப்பதாக பிரதமர் தெரிவித்தார். நிதி உதவிக்காக மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதால், அவர்களின் தேவையற்ற நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க வேண்டிய அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *