வெள்ளி விலையில் வரலாறு காணாத உயர்வு தங்கம் மற்றும் செம்பு விலையும் அதிகரிப்பு
January 2, 2026

புத்தாண்டு தொடக்கத்தில் இந்திய சந்தையில் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ. 2.43 லட்சத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேபோல் தங்கம் விலையும் சவரனுக்கு கணிசமாக உயர்ந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் தேவையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவின் விநியோகக் குறைபாட்டால் வெள்ளி தற்போது அரிதான உலோக வரிசையில் இணைந்துள்ளது இதனால் அதன் தேவை அதிகரித்துள்ளது. தங்கத்துடன் சேர்த்து செம்பு விலையும் 1.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இந்த உலோகங்களின் விலை மேலும் உயரக்கூடும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.